கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், அதானி வில்மர் நிறுவனத்தின் வருவாய் 13945.02 கோடியாக சரிந்துள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 14979.83 கோடியாக பதிவாகி இருந்தது. அதே வேளையில், மார்ச் மாத இறுதியில், அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர வருவாய் 93.61 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 60% சரிவாகும்.
அதானி வில்மர் நிறுவனம், சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், சமையல் எண்ணெய் விலைகள் சரிவடைந்து வருவதால், வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரின் வில்மர் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு வர்த்தகம் ஆகும். சமையல் எண்ணெய் தவிர, அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களையும் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.