அமெரிக்கா: மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு

February 14, 2023

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நேர்ந்தது. இதில் 3 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து பேசிய காவல்துறை துணைத் தலைவர் கிரிஸ் ரோஸ்மான், “பல்கலைக்கழக வளாகத்தில் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நேர்ந்துள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், முகமூடி அணிந்திருந்ததாகவும், குட்டையாக, சுருட்டை முடியுடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதல் துப்பாக்கிச் சூடு […]

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நேர்ந்தது. இதில் 3 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய காவல்துறை துணைத் தலைவர் கிரிஸ் ரோஸ்மான், “பல்கலைக்கழக வளாகத்தில் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நேர்ந்துள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், முகமூடி அணிந்திருந்ததாகவும், குட்டையாக, சுருட்டை முடியுடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதல் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டவுடன் எங்களுக்கு தகவல் கிட்டியது. அதன் பிறகு, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து, இரவு 8 மணிக்கு மேல் நடந்த இரண்டாம் துப்பாக்கிச் சூட்டுக்கு நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம்” என்று கூறினார். மேலும், இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்கலைக்கழக நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம் கவலை அளிப்பதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu