ஆப்கானிஸ்தான்: கருத்தடை சாதனங்களுக்கு தடை

February 18, 2023

தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய மக்கள் தொகையை குறைப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தாலிபான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அதன் பொருட்டு, காபூல் மற்றும் மசார்-இ-ஷெரீப் நகரங்களில், கருத்தடை சாதனங்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஆட்சியாளர்கள் […]

தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமிய மக்கள் தொகையை குறைப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தாலிபான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அதன் பொருட்டு, காபூல் மற்றும் மசார்-இ-ஷெரீப் நகரங்களில், கருத்தடை சாதனங்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஆட்சியாளர்கள் வெளியிடவில்லை. மாறாக, மருத்துவப் பணியாளர்களுக்கும், பேறுகால உதவியாளர்களுக்கும், ‘கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது’ போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக மருந்தகங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தடை ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளுக்கும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சுகாதாரக் கட்டமைப்பில் பின் தங்கியுள்ள ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களுக்கு தடை விதிப்பது, பெண்களின் மருத்துவ நலனுக்கு மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu