காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த  275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு

February 23, 2023

காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களிடையே பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து, லடாக் சிவில் விமான போக்குவரத்து துறை சிபாரிசின் பேரில் இந்திய விமானப்படை விமானத்தை அளித்தது. அதில் ஜம்முவில் இருந்து லேவுக்கு 193 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றொரு விமானம் […]

காஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களிடையே பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து, லடாக் சிவில் விமான போக்குவரத்து துறை சிபாரிசின் பேரில் இந்திய விமானப்படை விமானத்தை அளித்தது.

அதில் ஜம்முவில் இருந்து லேவுக்கு 193 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றொரு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர், கார்கில் ஜம்மு நகரங்களுக்கு 82 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu