உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தின் மீது இன்னும் சில நாட்களில் ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில், இந்தியாவுடனான ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்களின் தீர்மானத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு நாடு தனது பிரதேசத்தை கைப்பற்ற முயற்சிப்பதைத் தடுக்க பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இந்த கொள்கைகளை இந்தியாவும் உலகின் பெரும்பான்மையான நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.














