சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்காரணமாக ஏராளமான சாலைகள் பழுதாயின. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.1171 கோடியில் 1860 கிமீ நீள சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது.
சிங்காரசென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.41 கோடியே 65 லட்சத்தில், 362 சாலைகளை 62 கிமீ நீளத்துக்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரரை இறுதிசெய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.














