சர்வதேச கைப்பேசிகள் கண்காட்சி 2023 - ஸ்பெயினில் கோலாகலத் தொடக்கம்

February 27, 2023

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில், சர்வதேச கைபேசிகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023' என்ற பெயரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்காட்சி இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கியுள்ளதால், கைபேசிகள் துறை சார் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இந்த கண்காட்சியில், 200 நாடுகளைச் சேர்ந்த, 80000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குறைந்த பட்சம் 2000 எண்ணிக்கையில் கண்காட்சி பொருள்கள் இடம்பெறும் […]

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில், சர்வதேச கைபேசிகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023' என்ற பெயரில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்காட்சி இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கியுள்ளதால், கைபேசிகள் துறை சார் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

இந்த கண்காட்சியில், 200 நாடுகளைச் சேர்ந்த, 80000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குறைந்த பட்சம் 2000 எண்ணிக்கையில் கண்காட்சி பொருள்கள் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. அத்துடன், சாம்சங், சோனி போன்ற நிறுவனங்களிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளிவராது என கருதப்படுகிறது. ஆனர், ஒன் பிளஸ், ஹூவாய், நோக்கியா போன்ற நிறுவனங்களில் இருந்து அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியின் முக்கிய எதிர்பார்ப்புகள்: ஒன் பிளஸ் நிறுவனம் வெளிப்புற எல்.இ.டி லைட்டிங் உடன் கூடிய புதிய கைபேசியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மி நிறுவனம் ஷாவ்மி 13 ப்ரோ கைபேசியை வெளியிடலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ரியல் மீ நிறுவனம், தனது புதிய கைபேசியை வெளியிட உள்ளது. இது உலகின் முதல் 250 வாட்ஸ், வேகமாக சார்ஜ் ஆகும் கைபேசியாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu