என்ஆர்ஐகள், இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம் என்று முத்தூட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது. இதற்காக முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் இந்த கூட்டாண்மை மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான NRI களுக்கு பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அதிகமாக பணம் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் இ௫ நிறுவனங்களின் ௯ட்டாண்மையானது பயனாளிகள் எந்தக் கிளையிலும் தங்கள் கடன் கணக்குகளுக்கு பணத்தைப் பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தங்க நகை கடன் பெற்ற வாடிக்கையாளர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ இ௫ந்தால் அந்த தவணைத் தொகையை UAE ல் உள்ள லுலு எக்ஸ்சேஞ்சின் 89 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் NRIகள் செலுத்தலாம். அந்த தொகையை நகைக்கடன் கொடுத்த இந்தியாவில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளைகளுக்கு லுலு மனி டிஜிட்டல் மூலம் பணத்தை அனுப்பிவிடும்.
முத்தூட் ஃபைனான்ஸ் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் நகைக்கடன்களை, வீட்டிற்கே சென்று கொடுக்கும் புதிய வசதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.