செயற்கைக்கோளுடன் மோதலை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தின் வேகம் அதிகரிப்பு

பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில், சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. இந்நிலையில், அதே பாதையில் வரும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றுடன் விண்வெளி நிலையம் மோத இருந்தது. திங்கட்கிழமை இந்த மோதல் நடைபெற இருந்த நிலையில், அதனைத் தவிர்க்கும் விதமாக, விண்வெளி நிலையத்தின் இன்ஜின் இயக்கம் அதிகரிக்கப்பட்டது. சுமார் 6 நிமிடங்களுக்கு இன்ஜின் இயக்கம் அதிகரிக்கப்பட்டதால், விண்வெளி நிலையம் கூடுதல் வேகத்துடன் இயங்கி, செயற்கைக்கோளுடனான மோதலைத் தவிர்த்தது. இந்த தகவலை […]

பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில், சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. இந்நிலையில், அதே பாதையில் வரும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றுடன் விண்வெளி நிலையம் மோத இருந்தது. திங்கட்கிழமை இந்த மோதல் நடைபெற இருந்த நிலையில், அதனைத் தவிர்க்கும் விதமாக, விண்வெளி நிலையத்தின் இன்ஜின் இயக்கம் அதிகரிக்கப்பட்டது. சுமார் 6 நிமிடங்களுக்கு இன்ஜின் இயக்கம் அதிகரிக்கப்பட்டதால், விண்வெளி நிலையம் கூடுதல் வேகத்துடன் இயங்கி, செயற்கைக்கோளுடனான மோதலைத் தவிர்த்தது. இந்த தகவலை நாசா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம், செயற்கைக்கோள்களுடன் மோதும் சாத்தியக்கூறுகள் இதற்கு முன்னர் 32 முறை நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம், இதே போல, விண்வெளி நிலையத்தின் வேகம் மாற்றப்பட்டு, மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஒரு விமானத்தின் அளவை கொண்ட விண்வெளி நிலையம், செயற்கைக்கோளுடன் மோதினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், தற்போதைய நிலையில், 14 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu