உலகின் மிகப்பெரிய எரிமலையான 'மவுநா லோ' எரிமலை, ஹவாய் தீவில் அமைந்துள்ளது. இந்த எரிமலை 40 ஆண்டுகளுக்கு பின்னர், முதல் முறையாக வெடித்துள்ளது.
தற்போதைய நிலையில், எரிமலை வெடிப்பினால் வெளிவந்த லாவா குழம்புகள் எரிமலை பகுதிக்குள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்த வெடிப்பினால், அருகாமையில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது எரிமலை உச்சியில் உள்ள லாவா குழம்புகள், வெடிப்பு தீவிரமடையும் பொழுது கீழ் நோக்கி வரும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பை குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மவுநா லோ எரிமலை, 1843 தொடங்கி, 33 முறை வெடித்துள்ளது. இதற்கு முன்னர், 1984 ஆம் ஆண்டில், 22 நாட்கள் தொடர்ந்து லாவா குழம்புகளை வெளியேற்றியது. அப்போது, லாவா 7 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றது குறிப்பிடத்தக்கது.