டாடா டெக்னாலஜீஸ் - புதிய ஐபிஓ -வுக்கு விண்ணப்பம்

March 10, 2023

டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம், பொது பங்கீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக டாடா டெக்னாலஜீஸ் செயல்பட்டு வருகிறது. பொது பங்கீட்டுக்கு வருவதன் மூலம், இதன் 95708984 பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 23.6% ஆகும். மேலும், பொது பங்கீட்டில் 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தில், டாடா மோட்டார்ஸ் 74.42%, ஆல்பா டிசி ஹோல்டிங்ஸ் 8.96%, […]

டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம், பொது பங்கீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக டாடா டெக்னாலஜீஸ் செயல்பட்டு வருகிறது. பொது பங்கீட்டுக்கு வருவதன் மூலம், இதன் 95708984 பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 23.6% ஆகும். மேலும், பொது பங்கீட்டில் 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தில், டாடா மோட்டார்ஸ் 74.42%, ஆல்பா டிசி ஹோல்டிங்ஸ் 8.96%, டாடா கேப்பிட்டல் குரோத் ஃபண்ட் 4.48% பங்குகள் பெற்றுள்ளன. எனவே, ஐபிஓ வுக்கு வரும் பொழுது, டாடா மோட்டார்ஸ் 81133706 பகுதிகளையும், ஆல்பா டிசி ஹோல்டிங்ஸ் 9716853 பங்குகளையும், டாடா கேப்பிட்டல் குரோத் ஃபண்ட் 4858425 பங்குகளையும் விற்க உள்ளன. அவை முறையே 20%, 2.4% மற்றும் 1.2% ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu