இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஒவ்வொரு வருடமும், பள்ளிக் குழந்தைகளுக்கான ‘இளம் விஞ்ஞானி’ பட்டத் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான பதிவு தேதி இன்று முதல் தொடங்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2023 அன்று, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரோவின் isro.gov.in/YUVIKA.html தளத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எட்டாம் வகுப்பில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அது போக, ஆன்லைன் குவிஸ் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றது, பள்ளிகளில் மற்றும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் பங்கு எடுத்தது, ஒலிம்பியாட் அல்லது அதை போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், என்சிசி/ என்எஸ்எஸ் உள்ளிட்டவற்றில் பங்கெடுப்பது, உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும். - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














