4 மாதங்களுக்கு பிறகு இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் குலு மணாலி மற்றும் கீலாங் இடையே பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவை தொடர்ந்து குலு மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில இமாச்சல் சாலை வழி போக்குவரத்து கழகம் பேருந்து சேவைகளை நிறுத்தியது. பின்னர் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பேருந்து சேவை காலையில் 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது. முன்னதாக பனிப்பொழிவிற்கு பிறகு மே மாதத்தில் தான் பேருந்து சேவை தொடங்கும். கடந்த 2019 இல் ரோஹ் தாங்கில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து சேவைகள் மீட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று எச் ஆர் டி சி நிறுவனம் தெரிவித்துள்ளது.