பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளில் ஹால் டிக்கெட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 6ம் தேதி துவங்கி 20ஆம் தேதி முடிகிறது. இதற்கான செய்முறை தேர்வு கடந்த வாரம் பள்ளிகளில் நடந்தன. மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் விடுமுறை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.