அழகு சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள லாரேயல் நிறுவனம், அதே துறையில் பிரபலமாக உள்ள ஈசாப் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈசாப் நிறுவனத்தை, சுமார் 2.5 பில்லியன் டாலர்களுக்கு, லாரேயல் கையகப்படுத்தி உள்ளது.ஈசாப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான நேச்சுரா, இந்த ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளது. இது லாரேயல் நிறுவனத்தின் மிகப்பெரிய கையகப்படுத்துதல் நடவடிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், நேச்சுரா நிறுவனத்திற்கு கடன் சுமை குறையும் என சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, கார்னியர் மற்றும் மேபிலைன் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு ஒற்றைக் குடையின் கீழ் செயல்படத் துவங்கின. அதேபோன்று, இப்போது, லாரேயல் மற்றும் ஈசாப் நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.