தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

April 13, 2023

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்: *மது அருந்துதலுக்கு எதிரான விழப்புணர்வுப்‌ பிரச்சாரத்துடன்‌ போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்குப்‌ பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப்‌ பிரச்சாரத்தையும்‌ இணைந்து மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. *இந்த நிதியாண்டில்‌ 500 […]

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்:

*மது அருந்துதலுக்கு எதிரான விழப்புணர்வுப்‌ பிரச்சாரத்துடன்‌ போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்குப்‌ பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப்‌ பிரச்சாரத்தையும்‌ இணைந்து மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.

*இந்த நிதியாண்டில்‌ 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள்‌ ரூ.16.00 கோடி செலவில்‌ பொருத்தப்படும்‌.

*தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தில்‌ 31.03.2023 அன்றுள்ளபடி 5,329 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ செயல்பட்டு வருகின்றன. இதில்‌, தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ கண்டறியப்பட்டு மூடப்படும்‌.

*வாகனங்கள்‌ குறித்து தகவல்கள்‌ தரும்‌ உளவாளிகளுக்கு வழங்கப்படும்‌ வெகுமதித்‌ தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu