திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக குளிப்பதற்கு தடை

திருச்செந்தூர் கடலில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தினந்தோறும் தமிழகம் மற்றும் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் கடல் அங்குள்ள கடலில் நீராடிய பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு […]

திருச்செந்தூர் கடலில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தினந்தோறும் தமிழகம் மற்றும் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் கடல் அங்குள்ள கடலில் நீராடிய பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அங்கு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை கடல் வழக்கம் போல் இருந்ததால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி அளவில் கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu