இன்று ஒரு சிறிய கார் அளவிலான விண்கல் ஒன்று, பூமிக்கு மிக நெருக்கமாக வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. Asteroid 2023 HB என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், நேற்றுதான் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அதற்குள்ளாக, இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ குடும்பத்தை சேர்ந்த இந்த விண்கல் சுமார் 9.4 அடி அளவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், சூரியனை சுற்றிவர 1501 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. தற்போது, இது, மணிக்கு 44087 வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. இது பூமியிலிருந்து 121000 மைல்கள் தொலைவில், பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தின் பாதி அளவாகும். சராசரியாக, பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் 239000 மைல்கள் ஆகும். இந்த விண்கல்லை நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது.