கோயம்பேட்டில் ரசாயனம் கலந்த 7 டன் மாம்பழம் பறிமுதல்

April 26, 2023

சென்னை கோயம்பேட்டில் ரசாயனம் கலந்த 7 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திபான் போன்ற ரசாயனங்களைக் கலந்து மாம்பழங்களைப் பழுக்கவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் […]

சென்னை கோயம்பேட்டில் ரசாயனம் கலந்த 7 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திபான் போன்ற ரசாயனங்களைக் கலந்து மாம்பழங்களைப் பழுக்கவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 7 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu