பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்

September 3, 2022

பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. உலகளவில் பிரபலமான ப்ளூம்பெர்க் நிறுவனம், பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் நடத்திய ஆய்வில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியம் வருடாந்திர அடிப்படையில் டாலரில் கணக்கீடு செய்யும் பொருளாதார வளர்ச்சி தரவரிசையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது. […]

பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது.

உலகளவில் பிரபலமான ப்ளூம்பெர்க் நிறுவனம், பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் நடத்திய ஆய்வில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியம் வருடாந்திர அடிப்படையில் டாலரில் கணக்கீடு செய்யும் பொருளாதார வளர்ச்சி தரவரிசையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வைச் சந்தித்து வரும் பிரிட்டனுக்கு, இந்தியாவின் வளர்ச்சி கூடுதல் சவாலாக அமைந்துள்ளது. அண்மையில், பிரிட்டனின் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரும் நிலையில், பொறுப்பேற்க இருக்கும் புதிய பிரதமருக்கு, அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அதிகரிக்கும் விலைவாசி மற்றும் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், பிரிட்டனுக்கு 2024 ஆம் வரை பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பொருளாதார அடிப்படையில், இந்தியாவின் வளர்ச்சி பிரிட்டனின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன், பொருளாதாரத்தில், இரு நாடுகளும் போட்டி நிலையில் உள்ளன என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu