ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்பு விதிப்பது குறித்து இந்தியா ஆய்வு செய்யும் - மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

October 19, 2022

ரஷ்யாவின் எண்ணெய்க்கான விலை வரம்பு குறித்து இந்தியா ஆய்வு செய்யும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெயின் மீது விலை உச்சவரம்பை விதித்ததையடுத்து இந்தியயாவும் விலை வரம்பு விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே புது தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூரி, இது குறித்து ஆலோசனை செய்யப்போவதாக கூறினார். அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் விலை வரம்பு திட்டத்தில் இந்தியா […]

ரஷ்யாவின் எண்ணெய்க்கான விலை வரம்பு குறித்து இந்தியா ஆய்வு செய்யும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெயின் மீது விலை உச்சவரம்பை விதித்ததையடுத்து இந்தியயாவும் விலை வரம்பு விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே புது தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூரி, இது குறித்து ஆலோசனை செய்யப்போவதாக கூறினார்.

அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் விலை வரம்பு திட்டத்தில் இந்தியா சேர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் இது இந்தியாவின் நலனை பாதிக்கும் என்று கருதுகின்றனர். சர்வதேச அளவில் உள்ள ஏற்ற இறக்கமான எண்ணெய் விலைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு மலிவாக கிடைக்கப்பெற்ற ரஷ்ய எண்ணெயால் இந்தியா பயனடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 20 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை ரஷ்ய எண்ணெய் ஈடு செய்கிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்கு முன்பு இது வெறும் 1 சதவீதமாக இருந்தது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu