யுரேனஸ் -ன் 4 நிலவுகளில் கடல்கள் உள்ளன - நாசா அறிவிப்பு

நாசாவின் வாயேஜர் விண்கலம் அனுப்பிய தகவல்களின்படி, யுரேனஸ் கோளின் 4 பெரிய நிலவுகளில் கடல்கள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவுகளின் மையப் பகுதி மற்றும் அதன் பனி சூழ்ந்த பகுதிகளுக்கு இடையே, கடல் பகுதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. யுரேனஸ் கோளில் உள்ள மிகப்பெரிய நிலவுகளாக ஏரியல், அம்ப்ரியல், டைட்டானியா, ஒபேரா, மிராண்டா ஆகியவை உள்ளன. இந்த 5 நிலவுகளில், 4 நிலவுகளில் […]

நாசாவின் வாயேஜர் விண்கலம் அனுப்பிய தகவல்களின்படி, யுரேனஸ் கோளின் 4 பெரிய நிலவுகளில் கடல்கள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவுகளின் மையப் பகுதி மற்றும் அதன் பனி சூழ்ந்த பகுதிகளுக்கு இடையே, கடல் பகுதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

யுரேனஸ் கோளில் உள்ள மிகப்பெரிய நிலவுகளாக ஏரியல், அம்ப்ரியல், டைட்டானியா, ஒபேரா, மிராண்டா ஆகியவை உள்ளன. இந்த 5 நிலவுகளில், 4 நிலவுகளில் கடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடல்கள் 12 கிலோமீட்டருக்கும் அதிகமான அளவு ஆழமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யுரேனஸ் கோளில் மொத்தம் 27 நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu