உலக அளவில் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் நோயாக, கொரோனா, எய்ட்ஸ் ஆகியவற்றை தாண்டி, காசநோய் உள்ளது. தற்போதைய நிலையில், உக்ரைன் மற்றும் சூடான் பகுதிகளில், காசநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐநா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள போர் சூழல் காரணமாக, காச நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில், நாள் ஒன்றுக்கு 4400 பேர் காசநோய் காரணமாக இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 700 குழந்தைகளுக்கு உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரை, உக்ரைனில் 34,000 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, சூடானில் 18000 காச நோயாளிகள் இருந்ததாக தகவல் உள்ளது. எனவே, காச நோயை எதிர்த்து முறையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.