தன்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றச்சாட்டியுள்ளார்.
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அவர் நேற்று இரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அரசுக்கு எதிராக இம்ரான்கான் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்த 10 ஆண்டுகளில் என்னை சிறையில் அடைக்க பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மக்களுக்காக நான் சொல்வது என்னவென்றால் எனது கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நான் உண்மையான சுதந்திரத்துக்காக போராடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.