மெக்சிகோவில் வேன் மீது டிரக் மோதிய விபத்தில் 26 பேர் பலி

May 15, 2023

மெக்சிகோவில் வேனும் டிரக் டிரெய்லரும் மோதிய விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தமவுலிபாஸின் பொது பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், தமவுலிபாசில் டிராக்டர்-டிரெய்லர் மற்றும் வேன் ஆகிய இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மாநில தலைநகர் சியுடாட் விக்டோரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது. வாகனங்கள் மோதிக்கொண்டதில் அவை தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் […]

மெக்சிகோவில் வேனும் டிரக் டிரெய்லரும் மோதிய விபத்தில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து தமவுலிபாஸின் பொது பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், தமவுலிபாசில் டிராக்டர்-டிரெய்லர் மற்றும் வேன் ஆகிய இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மாநில தலைநகர் சியுடாட் விக்டோரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது. வாகனங்கள் மோதிக்கொண்டதில் அவை தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu