ரூ.1,426 கோடி நிகர லாபம் ஈட்டிய என்எல்சி

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1,426 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2022-23) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிறுவனம் 2022-23-ம் ஆண்டு தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து ரூ.16,165 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. முந்தைய 2021-22-ம் ஆண்டு இதே வகையில் ஈட்டிய வருவாயான ரூ.11,948 கோடியை விட […]

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1,426 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2022-23) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிறுவனம் 2022-23-ம் ஆண்டு தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து ரூ.16,165 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. முந்தைய 2021-22-ம் ஆண்டு இதே வகையில் ஈட்டிய வருவாயான ரூ.11,948 கோடியை விட இது 35 சதவிகிதம் அதிகம். இந்நிறுவனம் துணை நிறுவனங்களையும் சேர்த்து 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,426 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu