ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் உயர்வு

May 27, 2023

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 31ம் தேதி அன்று, நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு 3232 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1880 கோடியாக இருந்தது. எனவே, 72% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் கடன் வழங்கல் அளவு 2919 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 65% உயர்வாகும். ரெப்கோ […]

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 31ம் தேதி அன்று, நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு 3232 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1880 கோடியாக இருந்தது. எனவே, 72% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் கடன் வழங்கல் அளவு 2919 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 65% உயர்வாகும்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் நிதியாண்டு மொத்த வருவாய் 1299 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 1307 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிறுவனத்திற்கு வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாய் 4.8% உயர்ந்து, 583 கோடியாகவும், நிகர லாபம் 191 கோடியில் இருந்து 296 கோடியாகவும், உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் கடன் பரவல் விகிதம் 3.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது; நிறுவனத்தின் வாராக்கடன் 719 கோடியாக குறைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu