காங்கோவில் திறப்பு விழாவின் போது சிறிய பாலம் இடிந்து விழுந்தது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறிய பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. பாலத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்ட ரிப்பனை வெட்டி, பாலத்தை திறந்த வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது பாலம் திடீரென நொறுங்கி விழுந்தது. உடனடியாக அங்கிருந்த மக்கள் மற்றும் பாதுகாவலர்கள், அதிகாரிகளை காப்பாற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.