ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசர தரையிறக்கம் - அமெரிக்கா கண்காணிப்பு

June 7, 2023

தில்லியில் இருந்து, 216 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவில் உள்ள மகதான் விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 16 விமான பணியாளர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது விமான நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க […]

தில்லியில் இருந்து, 216 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவில் உள்ள மகதான் விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 16 விமான பணியாளர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது விமான நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. “விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் உள்ளனர், எத்தனை இந்தியர்கள் உள்ளனர் மற்றும் வெளிநாட்டினர் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu