முழுநேர உறுப்பினர் ஆகாத நிலையில், நேட்டோ படைகளை சுவீடன் வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார். நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார். சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும். எனவே சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.