தண்ணீருக்கு அடியில் செல்லும் ட்ரோன் - கோவையில் தயாரிப்பு

கடற்படையினர், தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன், கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், இந்தியாவிலேயே முதல் முறையாக, நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, பல தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, இந்த மையத்தில் தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன் தயாரிக்கும் […]

கடற்படையினர், தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன், கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், இந்தியாவிலேயே முதல் முறையாக, நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, பல தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, இந்த மையத்தில் தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இதனை தயாரித்து வருகிறது.

ட்ரோன் தவிர, ராணுவ பீரங்கி வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகள் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல் இ டி தொழில்நுட்பத்தில் இவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 676

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu