உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு டீஜே - அமெரிக்க வானொலி நிலையம் அறிமுகம்

அமெரிக்காவைச் சேர்ந்த வானொலி நிலையம் ஒன்று, உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு டிஸ்க் ஜாக்கியை அறிமுகம் செய்துள்ளது. Live 95.5 என்ற வானொலி நிலையம், அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் இயங்கி வருகிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதி, AI Ashley என்ற பெயரில், தனது ஸ்டூடியோவில் புதிய செயற்கை நுண்ணறிவு டிஸ்க் ஜாக்கியை வெளியிட்டுள்ளது. இந்த வானொலி நிலையத்தில் Ashley Elzinga என்ற தொகுப்பாளர் பணியாற்றி வருகிறார். அவரது குரலை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்கை […]

அமெரிக்காவைச் சேர்ந்த வானொலி நிலையம் ஒன்று, உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு டிஸ்க் ஜாக்கியை அறிமுகம் செய்துள்ளது. Live 95.5 என்ற வானொலி நிலையம், அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் இயங்கி வருகிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதி, AI Ashley என்ற பெயரில், தனது ஸ்டூடியோவில் புதிய செயற்கை நுண்ணறிவு டிஸ்க் ஜாக்கியை வெளியிட்டுள்ளது.

இந்த வானொலி நிலையத்தில் Ashley Elzinga என்ற தொகுப்பாளர் பணியாற்றி வருகிறார். அவரது குரலை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்கை நுண்ணறிவு டிஸ்க் ஜாக்கி ஒலிக்கிறது. எனவே, அவரது பெயரிலேயே இதற்கு AI Ashley என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு, ஜிபிடி 4 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Futuri Media வின் ரேடியோ ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், Ashley Elzinga என்ற தொகுப்பாளர் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், “இந்த செயற்கை நுண்ணறிவு கருவி, தொகுப்பாளர்களுக்கு மாற்றாகவும், செலவுகளை குறைக்கவும் அறிமுகம் செய்யப்படவில்லை; இது வானொலி நிலையத்தின் ஆகச் சிறந்த கருவியாக நீடிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu