அதிக வருவாய் கிடைக்க ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏ.சி.பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் ஏ.சி.எக்கனாமி என்ற 3ம் வகுப்பு ஏ.சி.பெட்டிகளை ரயில்வே துறை அறிமுகம் செய்தது. சமீபகாலமாக 2ம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் பல ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏ.சி.வசதி கொண்ட பெட்டிகள் அதிகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒரு கி.மீ. பயணத்திற்கு ரயில்வேக்கு வருவாயாக 2 அடுக்கு ஏ.சியில் ரூ.166 ம், 3 அடுக்கு ஏ.சி.யில் ரூ.129ம், ஸ்லீப்பர் பெட்டியில் ரூ. 50ம் கிடைக்கிறது. இதனால் வருவாயை அதிகரிக்கவே ஏ.சி.பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.