ஈரான் நாடு, கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நெருக்கம் காண்பித்து வருகிறது. அந்த வகையில், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளால் அமைக்கப்பட்ட ஷாங்காய் கூட்டமைப்பில் ஈரான் தற்போது இணைந்துள்ளது. இன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில், ஈரான், ஷாங்காய் கூட்டமைப்பின் உறுப்பினராக இணைய உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “புதிய நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் இணைவது, பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வலிமை சேர்ப்பதாக உள்ளது” என்று கூறினார். ஈரான் நாடு யுரேனியம் வளம் மிக்க நாடாகும். மேலும், ஆயுதத் துறையில் மிக முக்கிய வளர்ச்சியை ஈரான் எட்டி உள்ளது. எனவே, ஈரான் நாடு ஷாங்காய் கூட்டமைப்பில் இணைவது, சர்வதேச அரங்கில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.