அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனையை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஹ்வாசாங்-18 என்ற ஏவுகணை சோதனையை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா நடத்தியுள்ளது. தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டில் இதுவரை 12 ஏவுகணைகளை ஏவி சோதனை நிகழ்த்தியுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனி நபர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்துள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்பு போர் பயிற்சி நடத்தியது. மேலும் இது மூன்று நாடுகளுக்கு இடையேயான தங்களது பாதுகாப்பு, அபாய ஏவுகணைக்கு எதிரான தாக்குதல் திறன் மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தென்கொரியா தெரிவித்து இருக்கிறது.