ஸ்கை ரூட் நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி

ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்கை ரூட். இந்த நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை இஸ்ரோ வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோவின் புரோபல்ஷன் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு, ஸ்கை ரூட் நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை செய்யப்பட்டது. ராமன் 2 என்ற இன்ஜினில், திரவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உச்சகட்ட அழுத்த சூழ்நிலையில் ராக்கெட் என்ஜினின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக […]

ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்கை ரூட். இந்த நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை இஸ்ரோ வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோவின் புரோபல்ஷன் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு, ஸ்கை ரூட் நிறுவனத்தின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை செய்யப்பட்டது. ராமன் 2 என்ற இன்ஜினில், திரவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உச்சகட்ட அழுத்த சூழ்நிலையில் ராக்கெட் என்ஜினின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 10 வினாடிகளுக்கு இந்த சோதனை நடைபெற்றது. ஸ்கை ரூட் வடிவமைத்துள்ள விக்ரம் 1 ராக்கெட்டின் நான்காம் நிலை என்ஜினாக ராமன் 2 இணைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu