இந்திய வங்கிகளின் பணப்புழக்கம் - 2024 ஆம் நிதியாண்டில் முதல் முறையாக சரிவு

August 22, 2023

நடப்பு 2024 ஆம் நிதி ஆண்டில் முதல் முறையாக, இந்திய வங்கிகளின் பணப்புழக்கத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, இந்திய வங்கிகளின் மொத்த பணப்புழக்கம் 236 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையில் உள்ளது. அதே வேளையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், 13 மாத உச்சத்தில் பணப்புழக்கம் அதிகரித்திருந்தது. இம்மாத தொடக்கத்தில், 2.8 ட்ரில்லியன் ரூபாய் ஆக பணப்புழக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இது […]

நடப்பு 2024 ஆம் நிதி ஆண்டில் முதல் முறையாக, இந்திய வங்கிகளின் பணப்புழக்கத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, இந்திய வங்கிகளின் மொத்த பணப்புழக்கம் 236 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையில் உள்ளது. அதே வேளையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், 13 மாத உச்சத்தில் பணப்புழக்கம் அதிகரித்திருந்தது. இம்மாத தொடக்கத்தில், 2.8 ட்ரில்லியன் ரூபாய் ஆக பணப்புழக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இது நெடுநாட்கள் நீடிக்காமல், உடனடியாக, பற்றாக்குறை நிலையை எட்டி உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. இந்த பற்றாக்குறை நிலை குறித்து பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதன்படி, இன்னும் சில தினங்களுக்கு பற்றாக்குறை நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu