டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது

August 28, 2023

நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்களை கொண்ட ட்ராகன் விண்கலத்தை பால்கன் 9 ராக்கெட் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அமெரிக்கா ஜப்பான் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்துள்ளனர். இந்த நிலையம் பூமியிலிருந்து சுமார் 410 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதில் மேற்கண்ட நாடுகளில் உள்ள விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணிக்காக அமெரிக்க […]

நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்களை கொண்ட ட்ராகன் விண்கலத்தை பால்கன் 9 ராக்கெட் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

அமெரிக்கா ஜப்பான் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்துள்ளனர். இந்த நிலையம் பூமியிலிருந்து சுமார் 410 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதில் மேற்கண்ட நாடுகளில் உள்ள விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணிக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் 6 மாத ஆய்வு பணி காலம் விரைவில் முடிய இருக்கிறது. இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை நாசா மேற்கொண்டது. அதன்படி நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்களை கொண்ட ட்ராகன் விண்கலத்தை பால்கன் 9 ராக்கெட் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. டிராகன் விண்கலம் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu