சீன உளவு கப்பலுக்கு அனுமதி இல்லை - இலங்கை

September 27, 2023

சீன கப்பலுக்கு அனுமதி வழங்க முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா விரும்புகிறது. இதனால் தனது உளவு கப்பல்களை அடிக்கடி இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம் அது தென்னிந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்க்கிறது. இதன் காரணமாக சீன கப்பலை அனுமதிப்பதற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், இலங்கைக்கு சீனாவின் ஆராய்ச்சி உலக கப்பல் சமீபத்தில் வந்தது. அந்தக் கப்பல் […]

சீன கப்பலுக்கு அனுமதி வழங்க முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா விரும்புகிறது. இதனால் தனது உளவு கப்பல்களை அடிக்கடி இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம் அது தென்னிந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்க்கிறது. இதன் காரணமாக சீன கப்பலை அனுமதிப்பதற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், இலங்கைக்கு சீனாவின் ஆராய்ச்சி உலக கப்பல் சமீபத்தில் வந்தது. அந்தக் கப்பல் அடுத்த மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தது. அங்கிருந்து அது தென் தமிழகத்தின் ராணுவ நிலைகளை எளிதாக படம் பிடித்து ஆய்வு செய்ய முடியும். தமிழகத்தின் அருகே அந்த கப்பல் வரும் அபாயத்தை உணர்ந்த மத்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து உளவு கப்பல் வருகையை இலங்கை ஆய்வு செய்தது. இந்நிலையில், சீன கப்பலுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தற்போது இலங்கை அறிவித்துள்ளது. இந்த தகவலை இலங்கை வெளியுறத்துறை அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். எனவேதான் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை. எங்கள் கடல் பகுதி அமைதியான சூழலில் இருக்க வேண்டும் என்றார். முன்னதாக சீன உளவு கப்பலின் வருகைக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu