இந்தியாவின் வெளிநாட்டு கடன் 52 லட்சம் கோடி - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

September 29, 2023

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் மதிப்பு 52 லட்சம் கோடி அளவில் உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 629.1 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 52 லட்சம் கோடியாகும். இதுவே, மார்ச் மாத இறுதியில் 624.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 4.7 பில்லியன் டாலர்கள் கடன் உயர்ந்துள்ளது. நிலுவையில் உள்ள […]

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் மதிப்பு 52 லட்சம் கோடி அளவில் உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 629.1 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 52 லட்சம் கோடியாகும். இதுவே, மார்ச் மாத இறுதியில் 624.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 4.7 பில்லியன் டாலர்கள் கடன் உயர்ந்துள்ளது. நிலுவையில் உள்ள கடனில், நிதிசாராத நிறுவனங்கள் 39.8% அங்கம் வகிக்கின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய வங்கிகள் 26.6% , இந்திய அரசு 21.1% , பிற நிதி நிறுவனங்கள் 7.6% அளவில் பங்களிப்பு கொண்டுள்ளன. முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசின் கடன் நிலுவை குறைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu