ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் குஜராத்தில் மதிப்பு கூட்டம் பணியில் கழிவுநீர் வெளியேற்ற பிரச்சனைகளால் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 6 லட்சம் விசைதறிகளில் 4 தறிகளில் காட்டன் மற்றும் ரயான் துணிகள் உற்பத்தியாகி வருகிறது. மீதமுள்ளவைகளில் இலவச வேட்டி சேலை,பள்ளி சீருடை, துண்டு,வேட்டி போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள காடா துணிகளில் மதிப்பு கூட்டும் பணிக்கு பூஜ்ய நிலை டிஸ்சார்ஜ் பிரச்சினை உள்ளதால் ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களுக்கு அனுப்பி மதிப்பு கூட்டி மீண்டும் விற்பனைக்கு அனுப்பப்படும்.
இந்த நிலையில் கடந்த சில மாதமாக குஜராத்திலும் மதிப்பு கூட்டும் பணி கழிவுநீர் வெளியேற்ற பிரச்சனையால் முழு அளவில் அனுப்ப இயலாமலும், திருப்பி தர முடியாமல் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், துணி பண பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு துணிகளை அனுப்பும் பணிக்கான ஆதாரங்கள் நிறுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து இனி அடுத்து பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை வரை உற்பத்தி மந்தமாக இருக்கும் என்பதால் ராயன் மற்றும் காட்டன் உற்பத்தி குறைந்து பல ஆயிரம் தறிகள் வேலை இன்றி முடங்கி உள்ளது.