பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்றும் நாளையும் 23 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் திருவெற்றியூர் மற்றும் அன்னூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் படி சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் ரயில், மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் ரயில், சூலூர் பேட்டையில் இருந்து மூர் மார்கெட் செல்லும் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. இதே போல நாளை மூர் மார்கெட்டில் இருந்து சூலூர் பேட்டைக்கு செல்லும் ரயில்கள், மீண்டும் மறு மார்க்கமாக சூலூர் பேட்டையில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு புறப்படும் ரயில் சேவைகளும் ரத்தாகின்றன.இதேபோல சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில் என இன்றும் நாளையும் மொத்தம் 23 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது. பயணிகளின் வசதிக்காக சென்னை மூர் மார்க்கெட் கும்முடிபூண்டி வழித்தடத்தில் இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப் இருக்கின்றன.
தமிழகம்