ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ஓலா மற்றும் ஊபர் செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வழிகாட்டுதல்கள் வேண்டி, வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க, ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்கப்பட, பைக் டாக்ஸிகளை தடை செய்ய, வணிக வாகனங்களை இயக்க பேட்ச் லைசன்ஸ் பெற வேண்டாம் இன்னும் சட்டசபை அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உரிமைகுரல் ஹோட்டல் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.