திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அரசியல் கட்சியினர் முன்பு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். இது மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 33,34,786 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விபரம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண்,பெண் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 88 பேர் உள்ளனர். பொன்னேரி தொகுதியில் 2,52,774 வாக்காளர்களும், திருத்தணி தொகுதியில் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 872 வாக்காளர்களும், திருவள்ளுவர் தொகுதியில் 2,57,811 வாக்காளர்கள் எனவும் உள்ளனர்.அதேபோல் பூந்தமல்லி தனி தொகுதியில் மூன்று லட்சத்து 62,243 வாக்காளர்களும்,ஆவடி தொகுதியில் 4,31,980 வாக்காளர்களும், மதுரவாயல் தொகுதியில் 4,17,157 வாக்காளர்களும், அம்பத்தூர் தொகுதியில் 3,51,863 வாக்காளர்களும், திருவொற்றியூர் பகுதியில் 2,72,502 வாக்காளர்களும் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,52,568 வாக்காளர்கள் உள்ளனர்.














