ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் 'பிக் பில்லியன் டேஸ் 2022' பண்டிகை விற்பனையைத் தொடங்கியுள்ளது . வினாடிக்கு 1.6 மில்லியன் பயனர்களுடன்
அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது.
இது குறித்து ௯றிய பிளிப்கார்ட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டைவிட அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது எனக் கூறியது. அதிலும் குறிப்பாக மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் வயர்லெஸ் வகைகள் அதிக தேடப்பட்டுள்ளன. அதே சமயம் ஒப்பனை மற்றும் வாசனை வகைகளும் அதிகமாக விற்று வ௫கின்றன என நிறுவனம் ௯றியது. அதே போல் பிளிப்கார்ட் -இல் மளிகைப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பற்றி பிளிப்கார்ட் -ன் மூத்த இயக்குனர் மஞ்சரி சிங்கால் கூறியதாவது, எங்கள் விற்பனையாளர் மற்றும் கூட்டாளர்கள் மலிவு விலையில் பொ௫ட்களை வழங்குவதால் நுகர்வோர்கள் எண்ணிக்கை மற்றும் நிறுவனம் ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளது எனக் ௯றினார். அத்துடன் மொபைல்கள், பெரிய உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற வகைகள் வாங்குவோர் மத்தியில் அதிக ஆர்வத்தையும் தேவையையும் அதிகரித்துள்ளன. அதேபோல் பிளிப்கார்ட் ன் கிளை இ-காமர்ஸ் தளமான ஷாப்ஸி-யும் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதற்கிடையில் பண்டிகை கால விற்பனை டெலிவரிகளுக்காக ஃபிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ள டெலிவரி பார்ட்னர்களின் எண்ணிக்கை 2019 இல் 27,000 ல் இருந்து 2022 இல் 2 லட்சமாக உயர்ந்துள்ளது.