விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

September 26, 2022

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டம் குறித்து பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 168 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை பணி தற்போது நடைபெற்று […]

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டம் குறித்து பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 168 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்கிரவாண்டி - பண்ருட்டி - நெய்வேலி - வடலூர் - மீன்சூரிட்டி - கும்பகோணம் வரையிலான சுமார் 60 கிலோ மீட்டர் வரை சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னையிலிருந்து கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாற்றுப்பாதையில் செல்வதால் நேரம் மற்றும் பணம் விரயமாகிறது. எனவே இந்த பணிகள் முடிவடையும் வரை இந்த சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu