சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த கருவிகள் அடங்கிய பை ஒன்றை பனியின் போது தவறவிட்டனர். அந்தப் பை தற்போது பூமியை சுற்றி வந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் 1ம் தேதி, மகளிர் மட்டுமே பங்கு பெற்ற விண்வெளி நடைபயணம் நிகழ்ந்தது. இதன் போது, கருவிகள் அடங்கிய ஒன்று தவற விடப்பட்டது. அதன் தேவை தொடர்ந்து வேண்டியதில்லை என்பதால், அந்தப் பையை மீண்டும் கண்டறிவதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், வானத்தில் வெள்ளை நிறத்தில் பிரகாசமான புதிய பொருள் ஒன்று தென்பட்டது. இது குறித்து ஆராய்ந்ததில், இது தவற விடப்பட்ட கருவிகள் அடங்கிய பை என தெரியவந்துள்ளது. பூமியிலிருந்து பார்க்கும் பொழுது, 3வது பிரகாசமான பொருளாக சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. அதிலிருந்து 2 அல்லது 3 நிமிட தொலைவில் இந்த கருவிகள் அடங்கிய பை பூமியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளனர்.