ஈராக்கின் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாகாணத்தில் சாலையோரம் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது வெடிக்க செய்யப்பட்டது. அதில் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டனர். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும் பொது மக்கள். தாக்குதல் நடத்திய பிறகு பயங்கரவாதிகள் இந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த மாகாணத்தில் ஏற்கனவே இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு பலமுறை பயங்கரவாத தாக்குதல் நடத்தி இருக்கிறது. எனவே இந்த அமைப்புதான் இந்த செயலுக்குப் பின்னணியில் இருக்கும் என்று கருதப்படுகிறது.