உக்ரைன் கிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ரஷ்யா கடுமையான ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நெருங்க உள்ளது. ரஷ்ய படைகள் அவ்வப்போது உக்ரைன் நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை உக்ரைன் வீரர்கள் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சொலாமியன்ஸ்கி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில் அந்த குடியிருப்பின் மேல்தளம் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.