திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 20 குளிர்சாதன பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் சென்றுவர ஏதுவாக 20 அதி நவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.














